வித்தியாசமான முறையில் உலக கோப்பை அணியை அறிவித்த நியூசிலாந்து…, மீண்டும் கேப்டனாக களமிறங்கும் வில்லியம்சன்!!

0
வித்தியாசமான முறையில் உலக கோப்பை அணியை அறிவித்த நியூசிலாந்து..., மீண்டும் கேப்டனாக களமிறங்கும் வில்லியம்சன்!!
வித்தியாசமான முறையில் உலக கோப்பை அணியை அறிவித்த நியூசிலாந்து..., மீண்டும் கேப்டனாக களமிறங்கும் வில்லியம்சன்!!

ஐசிசி சார்பாக அடுத்த மாதம் ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் அறிவித்த நிலையில் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்போது வித்தியாசமான முறையில் அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, இந்த உலக கோப்பைக்கான நியூஸிலாந்து அணியை வீரர்களது குடும்ப உறுப்பினர்களை வைத்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த உலக கோப்பை நியூசிலாந்து அணியை காயத்தில் இருந்து மீண்டு உள்ள கேன் வில்லியம்சன் கேப்டனாக தலைமை தாங்க உள்ளார். ஐபிஎல் போட்டியில் தனது முழங்காலில் பலத்த காயம் அடைந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் தக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கிட்டத்தட்ட 5 மாதங்களாக தீவிர பயிற்சி செய்ததன் மூலம் மீண்டும் சர்வதேச அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் அரங்கில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹிட் மேன்…, வெளியான புள்ளி விவரம் இதோ!!

உலக கோப்பைக்கான நியூஸிலாந்து அணி:

கேன் வில்லியம்சன் (சி), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here