ஒரு பிரியாணிக்கு மனைவியை கொன்ற கணவன்.., அயனாவரத்தில் ஏற்பட்ட கொடூர சம்பவம்!!

0
ஒரு பிரியாணிக்கு மனைவியை கொன்ற கணவன்.., அயனாவரத்தில் ஏற்பட்ட கொடூர சம்பவம்!!
ஒரு பிரியாணிக்கு மனைவியை கொன்ற கணவன்.., அயனாவரத்தில் ஏற்பட்ட கொடூர சம்பவம்!!

பிரியாணி கேட்டதால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கணவர் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி:

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் 75 வயதுடைய கருணாகரன் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு 66 வயதுடைய பத்மாவதி என்ற மனைவி இருந்தார் . இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்த நிலையில், திருமணம் ஆன பின்பு எல்லாரும் தனித்தனி குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

வேலை தேடும் VIP கவனத்திற்கு – ரூ.20,000 சம்பளம், 600+ புதிய பணியிடங்கள்! முன்னணி நிறுவனம் அதிரடி!!

கருணாகரன் – பத்மாவதி தம்பதியர் மட்டும் அயனாவரம் வீட்டில் காலத்தை கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கருணாகரன் பிரியாணி வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். அதை பார்த்த மனைவி பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காண்டான கருணாகரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து பத்மாவதி மேல் ஊற்றி எரித்துள்ளார். அந்த வலியை தாங்க முடியாமல் கருணாகரனை கட்டி பிடித்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் உடம்பில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் வழக்கு பதிவு செய்து, பத்மாவதியிடம் வாக்கு மூலத்தை பெரும் போது பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் கருணாகரன் சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here