உலக கோப்பை பரபரப்பில் இந்திய வீரர் செய்த காரியம்…, இணையத்தில் வைரலாகும் பதிவு!!

0
உலக கோப்பை பரபரப்பில் இந்திய வீரர் செய்த காரியம்..., இணையத்தில் வைரலாகும் பதிவு!!
உலக கோப்பை பரபரப்பில் இந்திய வீரர் செய்த காரியம்..., இணையத்தில் வைரலாகும் பதிவு!!

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா போட்டியிடுவதற்கு முன்பு அஸ்வின் செய்த செயல்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த செயல் குறித்த இவரது பதிவும் டிரெண்டிங்காக மாறி வருகிறது.

அஸ்வின்:

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் ஸ்கோர் உயர்வதற்கு கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்கு வகித்திருந்தனர். இதே போல, எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தி 3 விக்கெட்டுகளை எடுத்து அஸ்வினும் இந்திய அணி வெற்றிக்கு கை கொடுத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் விக்கெட்டை கைப்பற்றியதை விட, இவர் செய்த ஒரு காரியம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, இந்த போட்டியில், ரோஹித் சர்மா டாஸ் குறித்து வர்ணையாளரிடம் பேசி கொண்டிருக்க, பின்புறம் அஸ்வின் தனது ஸ்வட்டரை கண்டுபிடிக்க மோந்து பார்த்து கொண்டிருந்தார். இவர் எதை மோந்து பார்க்கிறார் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு…, 3 பிரிவுகளில் டாப் 10 யில் நுழைந்து இந்திய வீரர்கள் அபாரம்!!

இதற்கு அஸ்வின், என் ஸ்வட்டர் எது என்று கண்டுபிடிக்க, முதலில் அளவை ஒப்பிட்டு பார்த்தேன் தெரியவில்லை. அதன் பின், இனிஷியல் இருக்கிறதா என்று பார்த்தேன் அதுவும் இல்லை. அதனால் தான் கடைசியாக என்னுடைய பர்பியூம் வாசனை வருகிறதா என்று பார்த்து ஸ்வாட்டரை கண்டுபிடித்து விட்டேன் என்று காமெடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here