மனிதர்கள் மலம் அள்ளுவதை தடை செய்யும் சட்டத்திருத்தம் – மத்திய அரசு திட்டம்!!

0

மனிதர்கள் மலம், சாக்கடைத் தொட்டிகளை சுத்தம் செய்வதை தடுக்கும் வகையிலும், பணியில் விபத்துக்கள் ஏற்பட்டால் உரிய இழப்பீடுகள் வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்:

செப்டம்பர் 14ம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடங்கவுள்ள நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடை செய்யும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் அவர்களின் மறுவாழ்வு திருத்த மசோதா, 2020ன் படி அந்த பணிகளில் முழுக்க முழுக்க இயந்திரங்களை பயன்படுத்துவதற்கும், விபத்துக்கள் ஏற்படாத வகையில் பணியில் சிறந்த பாதுகாப்பு மற்றும் இழப்பீட்டை வழங்க வகை செய்யவும் திருத்தும் செய்யப்பட உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

human scavenging
human scavenging

தற்போது, ​​எந்தவொரு தனி நபரோ அல்லது ஏஜென்சி மூலமோ சாக்கடைகள் மற்றும் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்வதற்காக அபாயகரமான முறையில் எந்தவொரு நபரையும் ஈடுபடுத்துவதற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களை இத்தகைய பணிகளில் ஈடுபடுத்துவதை தடைசெய்யும் சட்டத்தை மேலும் கடுமையானதாக மாற்ற இந்த மசோதா அமல்படுத்தப்படும்.

குளத்தூர் அருகே 25 வயது மாணவியுடன் 19 வயது வாலிபன் ஓட்டம் – பெற்றோர்கள் சமரசம்!!

நாட்டில் சாக்கடைகளை மனிதர்களை பயன்படுத்தி சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here