சூப்பரான ஹல்வா ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

தீபாவளி பண்டிகை நால்லே நம் வீட்டியில் இருக்கிற அனைவரும் ஸ்வீட் தான் கேப்பாங்க. என்ன தான் விதவித சுவிட்டு சாப்பிட்டாலும் அல்வா மாறி ஒரு ஸ்வீட் இருக்க முடியாது. அதே சுவையான ஆரோக்கியமான அசோகா அல்வா செஞ்சு கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட அல்வா பத்தி தாங்க பார்க்கபோறம்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 100கி

சீனி – 200 கி

கோதுமை மாவு – 2 கரண்டி

நேய் – 50 கி

முந்திரிப் பருப்பு – 10

கேசரி கலர் -சிறது

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து ஒரு கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொண்டு அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு தேவையான அளவுக்குதண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு நன்றாக வெந்ததும் நன்கு மசித்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து தனியாக வைத்துக் கொண்டு பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன் கோதுமை மாவை சேர்த்து ஒரு நிமிடம் பொன்னிறம் ஆகும் வரும் வரை கிளறவும்.

பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, பாதி அளவு நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறி அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது சீனி, கேசரி பவுடர் இரண்டையும் சேர்த்து கிளற வேண்டும். அப்பதான் சீனி நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும். பிறகு மீதுள்ள நெய், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும் சுவையான அசோகா அல்வா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here