டேஸ்டியான “முட்டைகோஸ் மஞ்சூரியன்” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

பார்ப்பதற்கு சிக்கன் 65 போலவே இருக்கும் மஞ்சூரியன் எப்படி வீட்லையே செய்யலாம்னு தாங்க இன்னைக்கி நாம பாக்கபோறோம். கடையில கண்ட கண்ட மசாலா எல்லாம் சேர்த்து இருப்பாங்க அதை நாம வாங்கி சாப்பிடும்போது நம் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லால் முகத்திலும் பருக்கள் போன்ற தேவையில்லாத பல பிரச்சனைக வருகின்றன. அதுனால வீட்டிலையே ஆரோக்கியமாகவும், சுவையாகவும் எப்படி மஞ்சூரியன் செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • முட்டைகோஸ் – 1/2 கிலோ
  • வெங்காயம் – 1/4 கிலோ
  • தக்காளி – 5
  • மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன்
  • சோயாசாஸ் ,தக்காளி சாஸ், சில்லி சாஸ்
  • உப்பு எண்ணெய் – தேவையான அளவு
  • கருவேப்பிலை, மல்லித்தழை – கைப்பிடி அளவு
  • சிக்கன் 65 பொறிக்க – தேவையான பொருட்கள்

செய்முறை:

முதலில் முட்டைகோஸை துருவி தண்ணீரை பிழிந்துவிட்டு சிக்கன் 65 செய்வது போன்றே அதற்கு தேவையான பொருட்களை(முட்டை, தயிர், சோளமாவு, கடலை மாவு உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சிக்கன் 65 மசால்) துருவிய முட்டைகோசுடன் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு துண்டுகளாக உருண்டை பிடித்து எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கருகவிடாமல் பொறித்து எடுக்கவும். பார்ப்பதற்கு சிக்கன் 65 போன்றே இருக்கும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதனுள் சோயாசாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும். சிறிது தண்ணீர் ஊற்றி கிரேவி பதத்திற்கு வந்தவுடன் பொறித்து வைத்திருந்த முட்டைகோஸ் சேர்க்க வேண்டும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மல்லித்தழையை சேர்த்து இறக்கவும். இப்படி செஞ்சு குடுத்து பாருங்க குழந்தைகள் இனி உங்களை விடவே மாட்டாங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here