எளிய முறையில் ஆன்லைனில் வாக்காளர் அட்டையை பெறுவது எப்படி?? தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

0
voter id
voter id

வாக்காளர் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணம் ஆகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் 18 வயது பூர்த்தியாகும்போது வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். இந்த வாக்காளர் அட்டையை விண்ணப்பிக்கும் எளிய முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…

வாக்காளர் அட்டை

18 வயது பூர்த்தியானவர்கள் இந்த வாக்காளர் அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கலாம். இதனை பெற அரசு அலுவலகங்கள், ஆன்லைன் இ- சேவைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

voter id
voter id

மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மண்டல அலுவலகம், வருவாய் கொட்ட அலுவலகம் போன்றவற்றில் சமர்ப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பத்தை ஆட்சித் தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலகம், துணை வாக்காளர் பதிவு அலுவலகம் ஆகிய இடங்களில் சமர்ப்பிக்கலாம்.

voter id
voter id
  • ஆன்லைன் மூலம் பதிவு செய்ய https://eci-citizenservices.eci.nic.in/default.aspx என்ற இணையதளத்தை கிளிக் செய்து அதில் sign in என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கேப்சாவை உள்ளிடவும். உங்கள் மொபைல் எண்ணுக்கு ‘Verifivation Code’ வரும். இதை உள்ளிடவும்.
  • அதன்பின் ஒரு கோரிக்கை படிவம் வரும். அதில் கேட்கப்படும் விபரங்களை கொடுத்து அதன்பின் Save என்று கொடுக்கவும். இப்பொழுது உங்கள் மொபைலுக்கு Confirmation செய்தி வரும். அதன்பின் ‘online application’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
voter id
voter id
  • பிறகுhttp://elections.tn.gov.in/VoterServices.aspx  இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான விண்ணப்பத்தை தேர்வு செய்து விபரங்களை உள்ளிடவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்ததும் 10 இலக்க எண் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் அதிகாரிகள் உங்கள் இல்லத்திற்கு வந்து அனைத்தையும் சரிபார்த்த பின் உங்களின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும். அதன்பின் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here