இருப்பிட சான்றிதழை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?? எளிய முறைகள் இதோ!!

0
nativity certificate
nativity certificate

நம்மில் பலருக்கு இருப்பிட சான்றிதழுக்கும், பிறப்பிட சான்றிதழுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. அதாவது பிறப்பிட சான்றிதழ் என்பது நாம் பிறந்தபோது நம் குடும்பம் எங்கு வசித்தனர் என்ற தகவலை தரும் சான்றிதழ். இருப்பிட சான்றிதழ் நாம் தற்போது எங்கு வசிக்கிறோம் என்பதை காட்டும் சான்றிதழ் ஆகும். இப்பொழுது இருப்பிட சான்றிதழை ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது என பார்க்கலாம்.

இருப்பிட சான்றிதழ்:

  • முதலில் tnesavai.in என்ற இணையத்திற்குள் செல்லவும். அதில் Sign up என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
nativity certificate
nativity certificate
  • அதனை கிளிக் செய்தால் மேலே கட்டப்பட்டது போல வரும். அதில் உங்கள் முழு பெயர், மாவட்டம், கைபேசி எண், தாலுகா, மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் போன்றவற்றை உள்ளிடவும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

  • பிறகு Login Id, பாஸ்வர்ட், கேப்ட்சா (captcha) போன்றவை கேட்கும். அதனை சரியாக உள்ளிடுங்கள். இப்பொழுது Sign up கொடுத்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிடவும். இப்பொழுது உங்களுக்கு Registration ஆகிவிடும்.
  • இப்பொழுது Login செய்வதற்கு முகப்பகுதிக்கு வர வேண்டும். இப்பொழுது உங்கள் Id Login ஆகிவிடும். இப்பொழுது அதில் சர்வீஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் Revenue department என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் Native Certificate என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
nativity certificate
nativity certificate
  • இப்பொழுது புதிய பக்கம் திறக்கும். அதில் Proceed என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். இப்பொழுது மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை உள்ளிடவும். திரும்பவும் Proceed கொடுக்கவும்.
nativity certificate
nativity certificate
  • இப்பொழுது இன்னொரு திரை வரும். அதில் Nativity by Resident என்பதை கிளிக் செய்து Submit என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது List of document என்ற பக்கம் திறக்கப்படும். அதில் உங்களது உங்கள் புகைப்படம். அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை உள்ளிடவும்.

nativity certificate

  • இவை அனைத்தையும் உள்ளிட்ட பிறகு Make Payment என்பதை கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்கள் இருப்பிட சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here