கேட்சை தவறவிட்ட விராட் கோஹ்லி – அனுஷ்காவுடன் ஒப்பிட்டு ‘டபுள் மீனிங்கில்’ வர்ணித்த சுனில் கவாஸ்கர்!!

0

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது. இதில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி பேட்டிங்கில் அதிரடி காட்டினர். கேப்டன் கேஎல் ராகுல் பெங்களூரு பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்தார். அவர் 83 மற்றும் 89 ரன்களில் இருந்த போது 2 கேட்ச் வாய்ப்புகளை கேப்டன் விராட் கோஹ்லி தவறவிட்டார். உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவரான கோஹ்லி கேட்ச்களை விடுவது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்தது.

 

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார். இது ஐபிஎல் தொடரில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி பேட்டிங்கில் சொதப்பியதால் 17 ஓவர்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இப்போட்டியில் விராட் கோஹ்லியின் பீல்டிங் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

போட்டியில் வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ‘ஊரடங்கு காலத்தில் அனுஷ்கா சர்மாவின் பந்துகளுக்கு மட்டுமே விராட் கோலி பயிற்சி எடுத்துள்ளார்’ என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவர் இரட்டை அர்த்தத்தில் இவ்வாறு கூறவில்லை என பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் போட்டியில் ஒரு வீரர் சரிவர செயல்படவில்லை என்றால் அவரது மனைவியை குறை கூறுவது சரியில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அனுஷ்கா சர்மாவும் இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

KXIP vs RCB: மெதுவாக பந்துவீசிய பெங்களூரு அணி – கேப்டன் விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!!

இதனால் ஐபிஎல் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து சுனில் கவாஸ்கர் விலக வேண்டும் என பலர் கோரி வருகின்றனர். மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடும் போதெல்லாம் விராட் கோஹ்லி ஆட்டத்திற்கு அனுஷ்கா தான் காரணம் என புகழ்ந்து பேசாமல், சரிவர ஆடாத பொழுது மட்டும் குறை கூறுவது சரியில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் இணையத்தில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here