கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை., திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி.., முழு விவரம் இதோ!!

0

மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு பல திட்டங்கள் செவ்வனே அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனாய் யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய். 5000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து, பார்க்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://pmmvy.wcd.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று குடிமகன் உள்நுழைவு விருப்பத்தை click செய்யவும். அதன்பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் ஓர் புதிய பக்கம் திறக்கப்படும். அவற்றில் கேட்கப்படும் தகவல்களை அளித்துவிட்டு தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. ஓபன் டாக் கொடுத்த ரஜினி.. முழு விவரம் உள்ளே!!

தகுதி:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண் வயது 19 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்:

கர்ப்பிணி பெண்ணின் ஆதார் அட்டை , சாதி சான்றிதழ், குழந்தை பிறப்பு சான்றிதழ். வருமான சான்றிதழ், முகவரி சான்றிதழ் .மொபைல் எண். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பான் கார்டு வாங்கி கணக்கு புத்தகம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here