உணவு வர தாமதம்!! ஓனரை சுட்ட டெலிவரி பாய்!!

0

டெல்லில கிரேட்டர் நொய்டால ஆன்லைன் டெலிவரி உரிமையாளரை சுட்டு கொன்றதாக ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் 3 பேரை அரெஸ்ட் பண்ண வீடியோ தான் இப்போ சோசியல் மீடியா முழுக்க வைரலாகி வருகிறது. நொய்டால மித்ரா சொசைட்டி பக்கத்துல ஜம் ஜம் என்ற பெயரில் ஆன்லைன் டெலிவரி உணவகம் நடத்திட்டு வந்தாங்க. அதுல சுனில் என்ற டெலிவரி பாய் உணவு லேட்டு ஆகுதுன்னு சண்டை போட்டுருக்காங்க. அப்போ இன்னும் ரெண்டு பேர் வர சண்டை ரொம்ப பெருசாச்சு.

விகாஸ் சௌந்தரி, தேவேந்திரனும் சேர்ந்து சண்டை போட்டுருக்காங்க. சுனில் ஆர்டர் பண்ணது சிக்கன் பிரியாணி, பூரி சப்ஜி. இந்நிலையில் ரெஸ்ட்ராண்ட்ல வேலை பாக்குறவங்க சிக்கன் பிரியாணியை கொடுத்துட்டு, பூரி சப்ஜி லேட்டாகும்னு சொல்லிருக்காங்க. அதுனால தான் பிரச்சனை வந்துருக்கு. அப்புறம் தான் சுனில் அவங்க கிட்ட இருந்த துப்பாக்கியை எடுத்து சுட் பண்ணிட்டாங்க. 3 பேர் மேலயும் கேஸ் பைல் பண்ணிருக்காங்க. CCTV பதிவை ஆதாரமாக போலீஸ் கலெக்ட் பன்னிருக்காங்க. இதுக்கு ஸ்வீக்கி தரப்பு, இனிமேல் வேலை செய்றவங்களோட பின்னணி செக் பண்றோம். அதுபோக கேஸ் எதுவும் இருக்கான்னு செக் பன்றோம்னு சொல்லிருக்காங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here