தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!

0
தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!
தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!

வங்க கடலில் உருவெடுத்துள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுப்பெற்று மோக்கா புயலாக உருமாறியுள்ளது. இதனை தொடர்ந்து மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த புயல் இன்று நண்பகல் மியான்மரின் சித்வே மற்றும் காஸ் பஜார் இடையே கரையை கடக்கும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த புயல் கரையை கடக்கும் போது சுமார் 220 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அது போக மோக்கா புயலால் வேறு எதுவும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மெருகேற்றிய ஷைனிங் மேனி., அதை மறைக்காமல் காட்டி இளசுகளின் heart பீட்டை எகிற விடும் ஷிவானி!!

அதன் முதல் நடவடிக்கையாக மியான்மரின் மேற்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மணிக்கு 180 கி.மீ. முதல் 190 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்பதால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here