தமிழக அரசு மருத்துவனைகளில் இது அவசியம்.,உயர்நீதிமன்றம் அரசுக்கு முக்கிய உத்தரவு!!

0
தமிழக அரசு மருத்துவனைகளில் இது அவசியம்.,உயர்நீதிமன்றம் அரசுக்கு முக்கிய உத்தரவு!!
தமிழக அரசு மருத்துவனைகளில் இது அவசியம்.,உயர்நீதிமன்றம் அரசுக்கு முக்கிய உத்தரவு!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ்க்கு இரவில் திடீரென்று இருதய வலி ஏற்பட்டதை தொடர்ந்து இவரது மனைவி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது செவிலியர்கள் காலையில் தான் இருதய பிரிவு மருத்துவர்கள் வருவார்கள் என்றும், அவசரம் எனில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸில் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவரது மனைவி வெரோனிகா மேரி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் இதுபோன்ற செயல்களால் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தென் தமிழக மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கான உபகரண வசதியை ஆய்வு செய்தும், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டும் என மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்தார்.

அச்சச்சோ.., முகம் வீங்கிய நிலையில் வெளியான ஸ்ருதிஹாசன் புகைப்படம்.., உங்களுக்கு என்ன ஆச்சு!!

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு மருத்துவமனைகளில் உபகரண வசதி பற்றி ஆய்வு செய்து ஆய்வறிக்கை மற்றும் அரசுத் தரப்பில் இந்த வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளரிடம் கூறி வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here