கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக்கொலை – ஹரியானாவில் பயங்கரம்!!

0

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் என அனைத்தையும் தாண்டி தற்போது ஹரியானா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி சுட்டுக்கொலை:

தேசிய குற்றப்பிரிவு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, நாட்டில் ஒரு நாளைக்கு 87 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி காதலிக்க மறுத்த பெண்ணை தாக்குவது, ஆசிட் அடிப்பது என அனைத்தையும் தாண்டி தற்போது ஹரியானாவில் கல்லூரி மாணவி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹரியானா மாநிலம் பல்லாப்கரில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு பி.காம் பயிலும் நிகிதா எனும் மாணவி தேர்வெழுதி விட்டு தனது தோழியுடன் நேற்று ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒருவர் நிகிதாவை காரினுள் இழுக்க முயற்சித்தார். ஆனால் நிகிதா தடுத்ததால், தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்த அந்த நபர் மாணவியை சுட்டுவிட்டு காரில் ஏறி தனது நண்பர் உதவியுடன் தப்பித்தார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பட்டப்பகலில் ரோட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய இருவரில் முக்கிய குற்றவாளி தளசிப் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொலையாளி ஏற்கனவே 2018ம் ஆண்டு நிகிதாவை கடத்த முயன்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here