அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி., தேர்தல் பணியில் இருந்து விலக்கு? கர்நாடகாவில் வெளியான தகவல்!!!

0
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி., தேர்தல் பணியில் இருந்து விலக்கு? கர்நாடகாவில் வெளியான தகவல்!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு முடிவடைய இருப்பதால், விடைத்தாள் திருத்தும் பணியுடன் தேர்தல் பணி கூடுதல் சுமையாக இருக்கும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை கடிதம் எழுதி இருந்த நிலையில், முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முக்கியமான சில ஆசிரியர்களுக்கு மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, மற்ற ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் ஆசிரியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

புது ரேஷன் கார்டு ஏப்ரல் 1 தேதி கிடைக்கும்.., அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here