அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி., இவர்களுக்கு 3.75% மற்றும் 4% உயர்வு., உத்தரவை பிறப்பித்த கர்நாடக முதல்வர்!!!

0
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி., இவர்களுக்கு 3.75% மற்றும் 4% உயர்வு., உத்தரவை பிறப்பித்த கர்நாடக முதல்வர்!!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில அரசும், தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.


அதன்படி கர்நாடக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 3.75% உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர், இதன் மூலம் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 38.75% லிருந்து 42.5% ஆக அகவிலைப்படி உயரும். அதேபோல் UGC, AICTE, ICAR மற்றும் JNPC ஆகிய ஊதிய விகிதங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி உள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் புது ரேஷன் கார்டு விநியோகம்.., உடனே மகளிர் உரிமை தொகைக்கு  விண்ணப்பிக்க முடியும்? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here