அரசு ஊழியர்களுக்கு தொடரும் தீபாவளி சர்ப்ரைஸ் – ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க முடிவு! அரசு அதிரடி!!

0
அரசு ஊழியர்களுக்கு தொடரும் தீபாவளி சர்ப்ரைஸ் - ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க முடிவு! அரசு அதிரடி!!
அரசு ஊழியர்களுக்கு தொடரும் தீபாவளி சர்ப்ரைஸ் - ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க முடிவு! அரசு அதிரடி!!

அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 12% சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஊழியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. அந்த வகையில், 2022 ஊதியம் மற்றும் பணிநிலை திருத்த சட்டத்தின் படி, எல்ஐசி ஊழியர்களுக்கு 12% ஊதிய உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏற்கனவே இவர்களுக்கான ஊதிய உயர்வு சட்டம் கடந்த 2017 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இவர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு மட்டும் அல்லாமல் இதுவரை வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

2 திருநங்கைகள் மீது கொடூர தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு! குற்றவாளி அதிரடி கைது!!

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து இந்த முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கான இந்த அதிரடி சர்ப்ரைஸ்கள் தொடர்ந்து வருவதால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அனைவரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here