திருமண நிதியுதவி பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு – விவரங்கள் உள்ளே!!

0
திருமண நிதியுதவி பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு - விவரங்கள் உள்ளே!!
திருமண நிதியுதவி பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு - விவரங்கள் உள்ளே!!

தமிழக அரசானது திருமண நிதியுதவிக்கான சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நிதியுதவிக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு புதிதாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை:

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவியினை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் பெண்களின் கல்விக்கு ஏற்ப பணமும் தங்க நாணயமும் வழங்கப்படும். இதன்முலம் பெண் கல்வி நிலையை உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

திருமண நிதியுதவி பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
திருமண நிதியுதவி பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரூ.25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு ரூ.50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.தற்போது இத்திட்டம் குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தமிழக அரசானது வெளியிட்டுள்ளது.

சுற்றறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:

· திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப்பணியில் இருக்க கூடாது.

·    வேறு எந்த திருமண நிதியுதவித்திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது

திருமண நிதியுதவி பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
திருமண நிதியுதவி பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

· மாடி வீடு – நான்கு சக்கர. வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்படாது

· திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும்.

·     ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here