குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, அதோடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., வெளியான முக்கிய செய்தி!!

0
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, அதோடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., வெளியான முக்கிய செய்தி!!
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, அதோடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., வெளியான முக்கிய செய்தி!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள் வழங்கி வரும் ரேஷன் கடைகளில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில் மார்ச் 2ம் வாரத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். மேலும் இத்திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் ஆன ஜூன் 3ம் தேதி அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இத்திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் கிடையாது என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் நீண்ட வருடங்களாக ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர், எடையாளர் என சுமார் 25,000 பேருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கூட்டுறவு துறை சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவு பல்வேறு பகுதிகளில் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் இது குறித்து புகார் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு ஷாக்., திடீரென உயர்ந்த சிமெண்ட் விலை! இனி வீடு கட்டுவதெல்லாம் கனவுதான்!!

இதை விசாரித்த நீதிபதிகள், உடனடியாக இந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கூட்டுறவு துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் ரேஷன் கடையில் பணிபுரியும் தகுதியானவர்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் பட்டியலை தயார் செய்ய மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here