சென்னை: ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.504 உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.504 உயர்வு - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.504 உயர்வு - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.38,416க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.504 உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்வதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. இருந்தாலும் கூட நகைப்பிரியர்கள் நகைகளில் முதலீடு செய்வதை தான் விரும்புகின்றனர். அதாவது, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பான திட்டமாகவும், எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் எண்ணுகின்றனர். இதனால், சம்பளத்தில் பாதி பணத்தை தங்கத்திலேயே முதலீடு செய்கின்றனர்.சிலர் தங்க நகை சீட்டு முறையிலும் தங்க நகைகள் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பினாலும் அவ்வப்போது தங்கநகையின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று மட்டுமே சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,658க்கு விற்பனையாகி வந்தது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

அதாவது, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.504 உயர்ந்து ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.63 அதிகரித்து ரூ.4,865 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.80 காசு உயர்ந்து ரூ.63.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,800 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை 504 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here