ஏறி இறங்கும் தங்கத்தின் விலை – எல்லாம் கொரோனா படுத்தும் பாடு.!

0

தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்பாட் கோல்டின் தேவை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது பெரிய அளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வருகிறது. எனினும் விலை தொடர்ந்து சற்று அதிகரித்தே தான் காணப்படுகிறது.

சர்வதேச சந்தை

தங்கம் விலை நிலவரம்..! செப்டம்பர் டூ ...

குறிப்பாக ஏப்ரல் 1 முதல் இன்று வரை 2 தினங்கள் மட்டுமே விலை குறைந்திருந்தது. மீதமுள்ள 7 நாட்களில் விலை அதிகரித்தே கொண்டே உள்ளது. தங்கம் விலையானது சர்வதேச சந்தையை பொறுத்த வரையில் ஏப்ரல் 1-லிருந்து ஒரே நாள் மட்டுமே வீழ்ச்சி கண்டது. மற்ற நாட்கள் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகிறது. மேலும் இன்று தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று 0.04% குறைந்து, 1,683.70 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

தங்கம் விலை

Gold Rate Today: Gold falls on rally in equities, low spot demand ...

சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 51 ரூபாய் குறைந்து, 44,890 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த ஐந்து தினங்களாகவே எம்சிஎக்ஸ் சந்தையில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், எம்சிஎக்ஸ் சந்தையில் அவ்வளவாக அது எதிரொலிக்கவில்லை என்றே கூறலாம்.

ஆபரண தங்கம் விலை

Gold prices today fall after hitting record highs, silver rates drop

ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே, அதாவது கடந்த 9 தினங்களில் இரண்டு நாட்கள் மட்டுமே சற்று குறைந்துள்ளது. எனினும் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,004 ரூபாயாகவும், சவரனுக்கு சற்று அதிகரித்து 32,032 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது மக்களை அவ்வளவாக பாதிக்கவில்லை என்றே கூறலாம்.

வெள்ளி விலை

வெள்ளி விலையானது 0.47% அதிகரித்து தற்போது 15.277 டாலராக வர்த்தகமாகி வருகின்றன. கடந்த மூன்று தினங்களாகவே விலை சற்று குறைந்து இருந்தது. தற்போது சற்று அதிகரித்து தான் வர்த்தகமாகி வருகிறது. சீனாவில் உற்பத்தி தற்போது தொடங்கியுள்ள நிலையில் வெள்ளியில் தேவையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வெள்ளியின் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

Silver rate today , Silver price India

இந்திய கமாடிட்டி சந்தையில் வெள்ளி விலையானது குறைந்தே காணப்படுகிறது. மேலும் தற்போது வெள்ளியின் விலையானது 179 ரூபாய் குறைந்து, 42,960 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த நான்கு தினங்களாகவே அதிகரித்து வந்த வெள்ளியின் விலையானது, இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரண வெள்ளி

German Silver jewellery added 11 new... - German Silver jewellery ...

தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து கிராமுக்கு 40.96 ரூபாயாகவும், இதே கிலோ 40,960 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த ஒன்பது தினங்களில் ஒரே நாள் மட்டும் சற்று குறைந்துள்ளது. இவற்றை வாங்க ஆள் இல்லாவிட்டாலும் விலைமட்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

விலை அதிகரிக்க காரணம்

உலகளவில் நிலவி வரும் கூர்மையான மந்த நிலையின் காரணமாக குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் அரசாங்கம் கடன் வாங்குவதில் பெரிய அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. மேலும் அமெரிக்காவில் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களால் அந்த நாட்டு நாணயம் வலுவடைந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

EU Braces For Coronavirus' Impact On PMI | PYMNTS.com

இது தங்கம் விலையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இன்று சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம், சர்வதேச பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here