அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி…!

0
Gold
Gold

புத்தாண்டு முதலே ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா வைரசால் நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்ததால் விலை அதிகரித்தது. வரலாற்றில் முதல் முறையாக சவரன் 33 ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் கலக்கமடைந்தனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 79 ரூபாய் குறைந்து ரூ. 3934க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 632 ரூபாய் குறைந்து ரூ. 31,472 விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here