அப்பாடா..! ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – சீக்கிரமா கடைக்கு கிளம்புங்க..!

0

கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் ஏறி வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கணிசமான அளவு குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விலையேற்ற காரணம்..?

Window display of jewelry shop

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்து உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ததால் விலை ஏறியது. தற்போது சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 624 குறைந்து உள்ளது. தினமும் ஆன்லைன் ரேட் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இன்றைய விலை..!

சென்னையில் சில நாட்களாக தங்கம் ஒரு சவரன் 33 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வந்தது. ஒரு வழியாக இன்று 32 ஆயிரத்திற்க்கும் கீழ் குறைந்து உள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.78 குறைந்து ரூ.3,986க்கும், ஒரு சவரன் ரூ.624 குறைந்து ரூ.31,888க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.60 குறைந்து ரூ.47.40க்கும்., ஒரு கிலோ வெள்ளி 47,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here