தமிழக அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றம்.., இனி பயணிகளுக்கு பிரச்சனையே இருக்காது.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழக அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றம்.., இனி பயணிகளுக்கு பிரச்சனையே இருக்காது.., வெளியான அறிவிப்பு!!!
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்களின் வசதிக்கேற்ப போக்குவரத்து கழகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கூட சமீபத்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்வதை தவிர்க்க பேருந்துகளில் தானியங்கி படிக்கட்டுகள் கொண்டுவரப்பட்டது. இது தவிர கடந்த சில மாதங்களாக  அரசு பேருந்துகளில் UPI மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை அறிமுகப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணி மலையின் கீழ் இயங்கும் பேருந்து நடத்துநர்களுக்கு UPI மற்றும் காடுகள் மூலம் பணம் செலுத்தி பயண சீட்டு வழங்கும் வகையிலான கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி தொடுதிரை வசதி கொண்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடத்தை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் முதற்கட்டமாக சென்னை மாநகர பேருந்துகளில் தொடங்கியுள்ள இந்த திட்டத்திற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இன்னும் மற்ற இடங்களில் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன் மூலம் நடத்துனர் மற்றும் பயணிகளிடையே ஏற்படும் சில்லறை பிரச்சனையும் தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here