அஜித், சிம்பு படங்களை பார்க்காதீர்கள் – கவுதம் மேனன் ட்வீட்

0

கொரோனா வைரஸ் நோயை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது ஊரடங்கால் மக்கள் அனைவரும் தங்களது வீட்ற்குள்ளே இருக்கிறார்கள்,தாங்கள் பொழுதினை போக்க குடும்பத்துடன் செலவிட்டும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் போக்குகிறார்கள். இத்தருணத்தில் கெளதம் மேனன் அஜித்,சிம்பு படத்தினை பார்க்க வேண்டாம் என்று ட்வீட் செய்துள்ளார்.

அஜித் சிம்பு படம் பார்க்க வேணாம்

கெளதம் மேனன் தனது டேடிவீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்டாரி பதிவிட்டுள்ளார் அதில் என்ன கூறியிருக்கிறார் என்றால் அஜித்,சிம்பு படத்தை பாக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்,அதாவது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு தனது காதலியை பைக்கில் மிக நீண்ட தூரம் அழைத்துச் செல்வார் என்றும் அதே போல் ’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் தனது மகளை பல மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பித்தார் என்றும், இன்றைய சூழ்நிலையில் இந்த இரண்டு உதாரணங்கள் தவறானது என்றும் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

144 மீற வேண்டாம்

144 ஊரடங்கு தடை உத்தரவை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து தேவைல்லாமல் அபராதம் கட்டி தொல்லைப்பட வேண்டாம் என்றும் கௌதம் மேனன் கூறியுள்ளார். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் அதிக புத்தகங்களை படிக்கலாம் என்றும் ஆன்லைனில் திரைப்படங்கள் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்,மேலும் உங்களால் முடிந்த அளவிற்கு தினக்கூலி செய்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்றும் கூறியுள்ளார் கௌதம் மேனன் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here