அம்மா உணவகத்தில் உணவுகள் இலவசமாக வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

0

கொரோனா வைரஸ் நோயை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது ஊரடங்கால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சிலர் உணவு இல்லாமலும் கஷ்டப்பட்டனர் அவர்களுக்கு சில சமூக மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது.இந்நிலையினுள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் மாவட்டத்தில் இன்று முதல அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று முதல் அம்மா உணவகம்

சேலத்தில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகராட்சியில் 11 இடங்களில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களிலும் 11 அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இதேபோல், ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், நரசிங்கபுரம் ஆகிய நான்கு நகராட்சிகள் சார்பிலும் தலா ஒரு அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற ஏழைகள் காலை, மதியம் சாப்பிட்டு வருகின்றனர்.

சூடான, தரமான, சுவையான காலை மற்றும் மதியம் 3 வகையான கலவை சாத வகைகள் அரசு நிர்ணயித்த மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் வசதி குறைவான ஏழை, எளிய மக்கள் உணவருந்தி வருகின்றனர்.சேலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஏழை எளிய மக்கள் போதிய வருமானம் இல்லாமல் இருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு உதவும் வகையில், அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் காலை மற்றும் மதியம் வேளைகளில் உணவருந்தும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும். இதற்கான செலவை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொள்ளும்.

சேலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி,முகக்கவசம்

மேலும், சேலம் மாநகராட்சியில் 2,112 தூய்மை பணியாளர்களும், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 356 தூய்மைப் பணியாளர்களும், மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 25 தூய்மை பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போதும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையை பாராட்டி, ஊக்கப்படுத்தும் வகையில் தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி, மற்றும் மே மாதம் 3-ந் தேதி வரை தினமும் ஒவ்வொரு முக கவசத்தை சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அதிமுக வழங்கும் என தெரிவித்துக்கொள்கிறேன், எனத் குறிப்பிட்டுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here