மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு – தமிழக அரசு உத்தரவு..!

0

தமிழகத்தில் ஏற்கனவே 4 மாவட்டங்களில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தற்போது மதுரை மாவட்டத்திலும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு:

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ளது. சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி உள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு முடக்கம் செயல்படுத்தப்பட உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

விதிமுறைகள்:

  • முழு முடக்கம் காரணமாக தேநீர் கடைகள் செயல்படஅனுமதியில்லை.
  • அத்தியாவசிய பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.
  • ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வீட்டிற்கே வந்து பொருட்கள் வழங்கப்படும்.
  • காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்.
  • உணவகங்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து உணவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
  • வரும் ஜூன் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
  • மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
  • மக்கள் தங்கள் வீட்டில் இருந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும். வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.
  • மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோ மற்றும் டாக்ஸிக்கு அனுமதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here