நாடு முழுவதும் ‘இலவச வைஃபை’ வசதி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

0

இந்தியாவில் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை வரும் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் கூறித்தாவது,”உரிய காலத்தில் 5 ஜி தொழில்நுட்ப வசதியைத் தொடங்குவதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் எல்லா கிராமங்களிலும் அதிவேக பைபர் ஆப்டிக் தொடர்பு வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை நாம் அமல் செய்து வருகிறோம்” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது, நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை நெட்வொர்க்கை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “நாட்டில் ஒரு பெரிய வைஃபை நெட்வொர்க்கை செயல்படுத்த, PM-Wi-Fi அணுகல் நெட்வொர்க்கை தொடங்க அமைச்சரவை முடிவை எடுத்துள்ளது.

இதற்காக நாட்டில் பொது தரவு மையங்கள் திறக்கப்படும். அதற்கான உரிமம், கட்டணம் அல்லது பதிவு எதுவும் இருக்காது” எனக் கூறினார்.எந்தவொரு உரிமக் கட்டணமும் வசூலிக்காமல் பொது தரவு அலுவலகங்கள் மூலம் பொது வைஃபை சேவையை வழங்க பொது வைஃபை நெட்வொர்க்குகள் அமைப்பது அதன் நோக்கமாகும்.

இது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ஒதுப்புதல் அளிக்கப்பட்டது. அவை பின் வருமாறு,

1.கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இந்தத் திட்டத்திற்கு ரூ.1,072 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. யுனிவர்சல் சர்வீஸ் ஆப்லிகேஷன் என்னும் நிதியத்தால் இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படும்.

2.புதிய பணியமர்த்தல் செய்ய வணிகங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனாவுக்கு ரூ 22,810 கோடி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3.வடகிழக்கு மாகாணத்துக்கான விரிவான தொலைத்தொடர்பு திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசம், அசாமின் கர்பி அங்லாங் மற்றும் திமா ஹசாஓ ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கைபேசி சேவை வழங்கும் “உலகலாவிய சேவை உதவி” நிதித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ரூ. 2,029 கோடியில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் சேவைகள் வழங்கப்படும்.

4.சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்காக, இந்தியா, சுரினாம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமது நாட்டின் சுகாதார, குடும்ப நல அமைச்சகமும், அந்நாட்டின் சுகாதார அமைச்சகமும் இணைந்து, சுகாதாரத் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here