தொடங்கியது இலவச பேருந்து பயணம் …! – குஷியில் திருநங்கைகள் !!!

0
அரசு பேருந்துகளில் மகளிருக்கான புதிய சேவை அறிமுகம் - தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு  முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் உதவிக்கு  செல்லும் ஒருவருக்கும் மற்றும் திருநங்கைகளுக்கும் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கான இலவச பயண சீட்டு இன்று வழங்கப்படுகிறது.

ஏற்கனவே அரசு பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன் பின்னர்  தமிழக முதல்வர் திருநங்கைகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவிக்கு உடன்  செல்லும் ஒரு நபருக்கும் மாநகர பேருந்துகளில் இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற ஒரு அறிவிப்பை அறிவித்தது.

இந்த அறிவிப்பானது மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சலுகையை பெற உரிய பயணசீட்டை அந்த அந்த பேருந்து நடத்துனரிடம் காண்பித்து பயணம் செய்யலாம் என்று கூறியிருந்தது. அதன்படி  இன்று முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய  மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் ஒரு உதவியாளர், திருநங்கைகளுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்படுகிறது. அதாவது சிவப்பு நிற பயணச்சீட்டு மாற்றுத்திறனாளிகளுக்கும் ,  நீல நிற பயணச்சீட்டு உதவியாளர் ஒருவருக்கும் , பிங்க் நிற பயணச்சீட்டு திருநங்கைகளுக்கு வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here