அன்பே வா சீரியலில் என்ட்ரி கொடுத்த முக்கிய பிரபலங்கள் – அதுவும் இந்த சீரியலில் இருந்தா??

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் புது என்ட்ரியாக பிரபல சீரியல் நடிகைகள் களமிறங்கவுள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அன்பே வா

சன் டிவியில் தற்போது சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பழைய கதையை போல அழுகை, மாமியார் கொடுமை என்று இல்லாமல் புது விதமாக ஆரம்பிக்கப்பட்டதால் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

ஏனெனில் மக்கள் தற்போது வெள்ளித்திரை அளவிற்கு சீரியல்களில் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போதும் ஆக்சன் காட்சிகள், லவ் என’ அனைத்தும் கலந்து சின்னத்திரையில் காட்டப்பட்டு வருகிறது. அப்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ‘அன்பே வா’.

வருண் பூமிகா ஜோடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பித்த சில மாதங்களிலேயே இந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அது கண்டிப்பாக கதைக்களம் தான். பூமிகாவிற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் வருண் தான் இதில் முக்கிய கதாபாத்திரமே.

மேலும் சீரியல் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வர மேலும் புதிய ட்விஸ்ட்டாக ரோஜா சீரியல் பிரபலங்கள் இதில் நுழைந்துள்ளனர். அதாவது ரோஜா சீரியல் நாயகி ரோஜா மற்றும் அவரது அத்தை கல்பனா குறி சொல்லும் பெண் வேடத்தில் இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here