குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் மரணம் – தலைவர்கள் இரங்கல்!!

0

குஜராத் முன்னாள் முதல்வராக இரண்டு முறை பதவி வகித்த கேசுபாய் படேல், உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். தனது குருவாக இருந்தவரின் மரணம் பிரதமர் மோடிக்கு சோகத்தை தந்துள்ளது.

மோடியின் குரு

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல், 93. கடந்த 1928ல் பிறந்த இவர், 1945ல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணைந்தார். இதன் பின், பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமானார். கடுமையாக உழைத்த இவர், 1995ல் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் முதல் முறையாக, குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியை அரியணையில் அமர வைத்தார். ஆனால், சக நிர்வாகி சங்கேர்சிங் வகேலா, கட்சியை உடைத்ததால் பதவி விலகினார்.

மீண்டும் 1998ல் முதல்வர் ஆனார். உடல் நலக்குறைவால், 3 ஆண்டுக்குப்பின் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின், காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த இவர், 2012ல் குஜராத் பரிவர்த்தான் கட்சியை துவக்கினார். இக்கட்சியை 2014ல் பா.ஐ., வுடன் இணைத்தார். இது வரை ஆறு முறை சட்டசபை உறுப்பினராக இருந்த கேசுபாய், கடந்த மாதம் கொரோனாவிலிருந்து மீண்டார். இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தற்போதைய பிரதமர் மோடி, குஜராத்தின் முன்னாள் முதல்வராக இருந்தார். 2001ல் கேசுபாய் பதவி விலகிய போது, மீதமிருந்த ஆட்சி காலத்தில் மோடி முதல்வராக இருந்தார். பா.ஜ.,வில் முக்கிய பதவியை மோடி பெற கேசுபாய் உதவினார். சமீபத்தில், குஜராத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற மோடி மேடையில் கேசுபாயின் காலில் விழுந்து வணங்கினார். கேசுபாய் மரணத்திற்கு மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here