சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள்.. வீட்டுக்கு முன் குவிந்த ரசிகர் படை.. வைரலாகும் புதிய புகைப்படம்!!

0
சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள்.. வீட்டுக்கு முன் குவிந்த ரசிகர் படை.. வைரலாகும் புதிய புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன், அன்று முதல் இன்று வரை ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் 168 படங்கள் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று (டிசம்பர் 12) தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதையடுத்து கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை ரஜினிகாந்துக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லம் முன்பு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளனர். தற்போது ரசிகர்கள் திரண்டு நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று, ‘ஒரு சந்திரன், ஒரு சூரியன் ஒன் அண்ட் ஒன்லி ரஜினிகாந்த்’ என்று பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

எதிர்பாராத டாஸ்க்கை சொன்ன விசித்ரா.., அதுக்குள்ள டிக்கெட் To Finale.., அதிரடியாக வெளியான பிக் பாஸ் ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here