நடிகையின் ட்விட்டர் பதிவால் கோவத்தில் ரசிகர்கள் !!!

0

காஜல் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய அனுஷ்காவின் பதிவிற்கு 7 மாதங்கள் கழித்து பதில் அளித்த காஜல் அகர்வால் மீது ரசிகர்கள் கடுமையான கோவத்தில் உள்ளனர்.

அனுஷ்காவின் ட்விட்டர் பதிவு:

தமிழ், தெலுங்கு என ரசிகர்களை கவர்ந்தவர் அனுஷ்கா. பாகுபலி திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை தன்வயப்படுத்தியவர் என கூறுவது மிகையாகது. மேலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் காஜல் அகர்வால். இவரின் துப்பாக்கி திரைப்படத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவ்வாறு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் காதலித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனால் சமூக வலைத்தளங்களில் தனது திருமண புகைப்படங்களை போடுவது என இணையத்தை கலக்கி வருகிறார் காஜல்.

காஜலின் திருமண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் அனுஷ்கா. காஜலின் திருமணம் முடிந்த மறுநாள் வாழ்த்தியிருந்தார் அனுஷ்கா. அந்த ட்வீட்டுக்கு காஜல் 7 மாதங்கள் கழித்து இப்போது தான் பதில் அளித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here