பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் தங்கைக்கு திருமணம் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

சின்னத்திரை சினிமாவில் பிரபல சீரியல் நடிகை சந்திரா லட்சுமணன் கிறிஸ்டி டோஸ் என்பவரை தனது 38 வயதில் திருமணம் செய்துள்ளார்.

38 வயதில் திருமணம்:

சின்னத்திரை உலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை சந்திரா லட்சுமண். இவர் தமிழில் காதலிக்க நேரமில்லை என்ற  சீரியலில் நடித்து மிகவும் புகழடைந்தார். மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பாசமலர் என்ற சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலினுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

அது போக, இவர் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியின் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிவிட்டார். 38 வயதான அவர் வாழ்க்கையில் தற்போது முக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது, நடிகர் கிறிஸ்டி டோஸ் என்பவரை அண்மையில் இவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தள பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here