பிரபல நடிகர் புற்று நோயால் திடீர் மறைவு – சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்!!

0
பிரபல நடிகர் புற்று நோயால் திடீர் மறைவு - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்!!

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்த, பிரபல நடிகர் டேவிட் வார்னர் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் இறப்பு:

உலக அளவில் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டைட்டானிக். பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த கடல் சார்ந்த காதல் ஹாலிவுட் திரைப்படத்திற்கென்றே தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தப் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் டேவிட் வார்னர். 80 வயதான இவர், ஒரு புகழ்பெற்ற மேடை நாடக கலைஞர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

நாடகங்களில் சிறந்து விளங்கிய இவர், சினிமாவில் நடிக்க ஆரம்பித்து புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தீவிர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்ததாகவும்  தகவல் வெளிவந்தது.

தற்போது நோயின் தீவிரம் அதிகமானதால், இவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் இவர், மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here