16 வயது இளம் நடிகை திடீர் உயிரிழப்பு – மர்ம மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

0
16 வயது இளம் நடிகை திடீர் உயிரிழப்பு - மர்ம மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

அமெரிக்காவின் புகழ் பெற்ற பிரபல தொலைக்காட்சி தொடர் நாயகியான கைலியா போஸி என்ற 16 வயது நடிகை, மர்மமான முறையில் இறந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி மரணம்:

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்  “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்கு கொள்ளும் இந்த போட்டி, கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 10 வருடங்களுக்கு முன்பு பங்குபெற்று, தனது புகைப்படத்தால் உலகம் முழுவதும் பேசப்பட்டவர் நடிகை கைலியா போஸி. இவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப் பெரிய அளவில் ரீச் ஆனார்.

16 வயது நிரம்பிய இவர், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த தகவலை அவரது தாயார் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘ஒரு அழகான பெண் குழந்தை இறந்து விட்டது, இதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். பிரபல நட்சத்திரத்தின் இந்த திடீர் மறைவு, திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைலியா போஸி தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here