டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு.., நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

0
மது ஊழல் வழக்கில் அமலாக்க துறையினரால் கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில் ஏப்ரல் 1ம் தேதி வரை அமலாக்க துறையினர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டெல்லி அவன்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அமலாக்கத் துறை இயக்குனரகம் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணையின் போது போதிய ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் இவரை இன்னும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதி தர வேண்டுமென கோரியுள்ளனர். இதன் காரணமாக அவன்யூ நீதிமன்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here