இன்று முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

0
இன்று முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!
இன்று முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், மின் கட்டணம் இன்று முதல் 5-10 சதவீதம் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மின் கட்டணம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அதன் பிறகு எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் 5-10% வரை மின் கட்டணம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கு காரணம் என்னவென்றால் அம்மாநிலத்தில் இயங்கும் எம்எஸ்இ டிசிஎல், பெஸ்ட், டாடா பவர் மற்றும் அதானி எலக்ட்ரிசிட்டி ஆகிய நிறுவனங்கள், நிலக்கரி உயர்வு அதிகரிக்கப்பட்டதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் இதை சரி செய்யும் விதமாக மின் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்…, ஐபிஎல்லில் அனுமதிக்கப்படாததை அடுத்து பிசிசிஐ-யை விமர்சிக்கும் கேப்டன்!!

இவர்களின் கோரிக்கையை விசாரித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பங்குதாரர்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் மகாராஷ்டிராவில் மின் கட்டண உயர்வை அதிகரிக்க MERC ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த மின் கட்டண உயர்வு நிறுவனங்களை தவிர்த்து குடியிருப்புகளுக்கு ரூ.13 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here