வாக்காளர் பட்டியலில் பிழையா? 27-ம் தேதி திருத்தப் பணிகள் தொடக்கம்.., தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

0
வாக்காளர் பட்டியலில் பிழையா? 27-ம் தேதி திருத்தப் பணிகள் தொடக்கம்.., தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!
வாக்காளர் பட்டியலில் பிழையா? 27-ம் தேதி திருத்தப் பணிகள் தொடக்கம்.., தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

பொதுவாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வருடந்தோறும் நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மறு நாள் (அக்டோபர் 27-ம் தேதி) வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்குகின்றன.

Enewz Tamil WhatsApp Channel 

எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவைகளுக்கு வருகிற டிசம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் டிசம்பர் 26 வரை பரிசீலிக்கப்பட்டு அடுத்த வருடம் 2024 ஜனவரி 5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்., TN TRB அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here