தேர்தல் பிரச்சாரத்தில் இத செஞ்சா அவ்ளோ தான்., கட்சியின் பதிவு ரத்து? உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!!!

0
தேர்தல் பிரச்சாரத்தில் இத செஞ்சா அவ்ளோ தான்
நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்களும் இலவச பொருட்கள் வழங்குவது குறித்து பேசுவது வழக்கமாகி வருகிறது. அதேபோல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் சில நேரங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை வழங்குவது என்பது சட்டப்படி லஞ்சம் வழங்குவதற்கு இணையான ஒன்று. இது போன்று அறிவிக்கும் அரசியல் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சட்ட விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக் கூடிய அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார். இப்படியாக எழுத்துப்பூர்வ வாதத்தை வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு நேற்று (நவ.27) சமர்ப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here