தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நியமனம்., வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நியமனம்., வெளியான முக்கிய தகவல்!!!
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நியமனம்., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி நிரவல் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 8 முதல் 31ம் தேதி வரை பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கிடையில் TET தேர்ச்சியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில், தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு கூட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி மே 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை கலந்தாய்வு கூட்டத்துக்கான கால அட்டவணை திருத்தப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பணி நீக்கம்., வெளியான முக்கிய தகவல்!!!

நடந்து முடிந்த கலந்தாய்வு கூட்டம் மூலம் தொடக்கப்பள்ளிகளில் 1,111 தலைமை ஆசிரியர்கள், நடுநிலை பள்ளிகளில் 424 தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 1,777 பேர் என மொத்தமாக 3,312 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது போக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here