பள்ளி, கல்லூரிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பணி நீக்கம்., வெளியான முக்கிய தகவல்!!!

0
பள்ளி, கல்லூரிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பணி நீக்கம்., வெளியான முக்கிய தகவல்!!!
பள்ளி, கல்லூரிகளில் தகுதியில்லாத ஆசிரியர்கள் பணி நீக்கம்., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள பள்ளிகள் மீது விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில் பெங்களூர் மாநகராட்சியில் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 10 சதவீதம் குறைந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது தொடர்பாக விசாரித்ததில் போதிய கல்வி தகுதி இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமித்ததாக தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது “ஒப்பந்த அடிப்படையில் தகுதியில்லாத ஆசிரியர்களை நியமித்தவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கிவிட்டு, புதிய ஆசிரியர்களை நியமித்து தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இம்மாதம் முதல் உயரும் மின் கட்டணம்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

தொடர்ந்து பேசுகையில், “பள்ளி, கல்லூரிகளில் தகுதியில்லாத ஆசிரியர்களை கண்டறிந்து பணி நீக்கம் செய்ய உள்ளோம். அந்த வகையில் 180 ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது. இவர்களுக்கு பதிலாக தகுதியுள்ள புதிய ஆசிரியர்களை நியமித்து தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியிடப்படும்.” என தகவல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here