உங்க தோசை கல்லில் ஒழுங்கா தோசை வரலையா? இந்த டிப்ஸ செஞ்சு பாருங்க! மொறு மொறுன்னு வரும்!!

0
உங்க தோசை கல்லில் ஒழுங்கா தோசை வரலையா? இந்த டிப்ஸ செஞ்சு பாருங்க! மொறு மொறுன்னு வரும்!!

தோசைக்கல்லில் சப்பாத்தி அல்லது மீன் வருவல் போன்றவற்றை செய்து விட்டால், சில நேரம் தோசை ஒழுங்காக வராது. அந்த தோசை கல்லை, எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 மொறுவல்  தோசை :

தோசை என்றால் நம் அனைவருக்கும் கொள்ளை பிரியும். அதுவும் ஹோட்டல்களில் சாப்பிடும் தோசை மிகவும் மெல்லியதாக, மொறு மொறு வென இருக்கும்.  இதே போல் நம்மால் வீட்டிலும் செய்ய முடியும். ஆனால், சில நேரங்களில் தோசை கல்லில்  சப்பாத்தி, கோதுமை தோசை மற்றும் மீன் வருவல் போன்றவற்றை செய்து விட்டால், நாம் நினைக்கும் அளவுக்கு தோசை ஒழுங்காக வராது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்


பிஞ்சு பிஞ்சு வரும் அல்லது மந்தமாக வரும். இதை சரி செய்ய, என்ன செய்யணும்? ஒன்னும் இல்ல, தோசை கல்லை ரொம்ப நேரம் அடுப்பில் வைத்து விட்டால் அது மிகவும் சூடேறி தன் தன்மையை இழந்து விடும். இதனால் அதில் தண்ணீரை தெளித்து, அதை குளிர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும்.


அதன் பிறகு ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதை வட்டமாக வெட்டி அந்த தோசை கல்லின் மேல் தேய்க்க வேண்டும். அதேபோல் வெங்காயத்தையும் வெட்டி தோசைக்கல் மேல் தேய்க்கலாம். அதன் பிறகு, அந்த தோசை கல்லில் ஒரு ஆம்லெட் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.


ஏனென்றால் அப்போதுதான் அந்த கல்லுக்கு வழுவழுப்பு தன்மை கிடைக்கும். ஆரம்பத்தில் ஒன்று  அல்லது இரண்டு தோசை சற்று மந்தமாகத்தான் வரும். அதன் பிறகு நீங்கள் நினைக்கும் ரேஞ்சில் தோசை கிடைக்கும். அப்புறம் என்ன, இந்த டிப்ஸை நீங்கள் செய்தால், மிகவும் மெல்லியதான மொறு மொறு தோசையை  சுட்டெடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here