உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கேற்ப மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல புதுப்புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. ஆனால் வாட்ஸ்அப் செயலி மூலம் தற்போது மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த செயலியின் மூலம் சிலர் போலியான செய்திகளை பரப்பி பணம் சம்பாதித்தும் வருவதால் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் பரிசு, வேலை வாய்ப்பு, வங்கி எச்சரிக்கை, ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள், இலவச ஒடிபி சந்தா, போலியான டெலிவரி, அமேசான் செக்யூரிட்டி போன்றவை தொடர்பான ஏதேனும் மெசேஜ் அல்லது லிங்க் வந்தால் அதை தயவு செய்து ஓபன் செய்து பார்க்காமல் தவிர்ப்பது சிறந்ததாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது போன்ற லிங்கை அனுப்பி அதை பயனர்கள் கிளிக் செய்வதன் மூலம் அவர்களது வங்கி கணக்கு தரவுகள் திருடு போவதாகவும் கூறப்படுகிறது.