தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 2022-2023 ஆம் கல்வி ஆண்டு முதல் காலை உணவுத்திட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் முதலில் 1.14 லட்சம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பட்டு வந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டு சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் பலன் குறித்து சமூக நலத்துறை இயக்குநர் அமுதவல்லி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த திட்டத்தின் மூலம், வேலைக்கு செல்லும் ஏழை மாணவர்களின் பெற்றோர் காலை உணவு தயாரிக்கும் பணியில் இருந்து தங்களை விடுவித்து கொண்டுள்ளனர். மேலும், மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் நேரத்திற்கு பள்ளிக்கு வந்தடைகின்றனர். இதனால், மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, காலை உணவுத் திட்டத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால், 1800 4258971 இந்த எண்ணின் மூலம் மாவட்ட கலெக்டர்கள் விசாரித்து கேட்டறிந்து வருகின்றனர்.