இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்., அமைச்சர் வேண்டுகோள்!!

0
இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்., அமைச்சர் வேண்டுகோள்!!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவுரை வழங்கியுள்ளார்.

H1N1 வைரஸ்:

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் அதி வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக காத்துகொண்டு உள்ளனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது பரவி வரும் காய்ச்சல் சீசனுக்கு சீசன் ஏற்படும் காய்ச்சல் தான். எனவே மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கடந்த ஜனவரி முதல் தற்போதுவரை 1,166 பேர் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்றைய பாதிப்பு 371 ஆக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு நிலவரப்படி, 5 வயதுக்குட்பட்டவர்களில் 46 குழந்தைகள், 5 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 60 பேர் ,15 வயதில் இருந்து 65 வயதுக்குட்பட்டவர்களில் 194 பேர் , 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 71 பேர் H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த வைரஸ் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் 15 பேரும், வீடுகளில் 96 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 200 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை.,அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

மேலும் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் உள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த உள்ளதாகவும், நடமாடும் மருத்துவ வாகன முகாம்கள் மூலம் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். தொண்டை வலி, உடல் வலி, லேசான இருமல் விட்டு விட்டு காய்ச்சல் ஆகிய அறிகுறி இருந்தால் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்களும் குழந்தைகளை வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here