அடேங்கப்பா எவ்வளோ பெரிய விஷயம்., T20 உலக கோப்பையில் விளையாடமாளே இப்படி ஒரு சாதனையா??

0
அடேங்கப்பா எவ்வளோ பெரிய விஷயம்., T20 உலக கோப்பையில் விளையாடமாளே இப்படி ஒரு சாதனையா??
அடேங்கப்பா எவ்வளோ பெரிய விஷயம்., T20 உலக கோப்பையில் விளையாடமாளே இப்படி ஒரு சாதனையா??

நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் கப்தில் ஏழாவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளார்.

மார்ட்டின் கப்தில்

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான நியூசிலாந்து அணி பல வெற்றிகளை குவித்துள்ளது. இதனால் உலக கோப்பை தொடரில் இவர் தலைமையிலான அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அணியில் ஃபின் ஆலென், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்தில் போன்ற நட்சத்திர வீரர்கள் உலக கோப்பை போட்டியில் களமிறங்க உள்ளனர்.

இந்த நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து அணியில் மீண்டும் பிடித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இவர் நியூசிலாந்து அணிக்காக பல முறை உலக கோப்பை போட்டியில் விளையாடி உள்ளார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு T20 உலக கோப்பை தொடரில் 7 வது முறையாக விளையாட உள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன் மூலம் T20 உலக கோப்பை தொடரில் அதிக முறை விளையாடிய நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மார்ட்டின் கப்தில் அடைந்துள்ளார். மேலும் இவர் நியூசிலாந்து அணிக்காக இதுவரை 121, டி20 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உட்பட 3497 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அணியில் இடம்பிடித்துள்ள மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ஃபின் ஆலனுக்கு போன்ற வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது இதுவே முதல் முறை ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here