சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை.,அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

0
சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை.,அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

தமிழகத்தில் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. மேலும் கடந்த வாரம் தங்க விலை குறைந்து இருந்தாலும், இன்று தங்க விலை ஏற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

கொரோனா காலகட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக மக்கள் அதிக பாதிப்பை சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்கள் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் அடிப்படையில் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்கள், தங்கம் ஆகியவைகளில் பணங்களை முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீடுகள் மக்களின் கஷ்ட காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்தியாவில் தென் மாவட்டங்களில் உள்ள பெண்கள் அதிகம் நகை விரும்பிகளாக இருப்பார்கள். அதனால் தங்கத்தில் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை அதிக சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகைக்கடைகளில், நகை வாங்க கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் தங்க விற்பனை அதிகமாக இருந்தது.

பொன்னியின் செல்வன் பட முக்கிய ரகசியம் அம்பலம் – பளிச்சென போட்டுடைத்த இயக்குனர் மணிரத்தினம்!!

இந்நிலையில் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,120க்கு விற்பனை ஆகிறது. இதையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,640க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.62.30-க்கு விற்பனை ஆகிறது. இப்படி தங்க விலை உயர்ந்தால், தங்க நகைகள் வாங்குவது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here