தமிழக ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம்., அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

0
தமிழக ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம்., அதிர்ச்சி ரிப்போர்ட்!!!
தமிழக ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம்., அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுப் பொருட்கள் தரமான வகையில் கலப்படம் இல்லாமல் வழங்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திட்டக்குடி அருகே உள்ள ரேஷன் கடையில், வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ஆலம்பாடி பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட ரேஷன் அரிசியில், வெள்ளை நிறத்தில் நீளமான அரிசி கலந்திருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

அரசு பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்த அரிசியை ஊற வைக்கும் போது தண்ணீரில் மிதப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கான தகுந்த நடவடிக்கைகளை உணவு பொருள் வழங்கல் துறை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here