ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!!

0

ஆயிரக்கணக்கான வழக்குகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் சிக்கியுள்ளதால், அதனை கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வு, பள்ளி, கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் உள்ளிட்டவை, டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இப்போது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் ஆயிரக்கணக்கான டி.ஆர்.பி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் உயர் கல்விக்கான பல நியமனங்களில், டி.ஆர்.பில் சரியான போட்டித் தேர்வோ,  நேர்முக தேர்வோ, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவையோ நடத்தப்படாததும் தெரிய வந்துள்ளது. எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நியமனம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here